ஹாசினி ரூபன்
கொழும்பு:
நேற்று நடைபெற்று முடிந்த இலங்கை நாடாளுமன்ற பொதுத் தேர்தலில், தற்போது வரை வெளிவந்துள்ள முடிவுகளின் அடிப்படையில் நடப்பு அதிபர் அநுர குமார திஸாநாயக்கவின் தேசிய மக்கள் சக்தி (NPP) முன்னிலை பெற்றுள்ளது. தொடர்ந்து, ஐக்கிய மக்கள் சக்தி (SJB) 18.74 விழுக்காடு பெற்று இரண்டாம் இடத்திலும், முன்னாள் அதிபர் ரணில் விக்கிரமசிங்கே ஆதரவு அணியான புதிய ஜனநாயக முன்னணி (NDF) 4.60 விழுக்காடும் பெற்று மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில், இதுவரை காலமும் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்திய இலங்கை தமிழரசுக் கட்சி (ITAK) வரலாறு காணாத பின்னடைவை சந்தித்து 1.54 விழுக்காடு மாத்திரமே பெற்றுள்ளது. இதற்கு அக்கட்சி மக்களிடையே பெற்றுள்ள அதிருப்தியை முக்கிய காரணம் என்று அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.