கோலாலம்பூர்:
குறைந்த கட்டணத்தில் விமான சேவையை வழங்கும் IndiGo விமான நிறுவனம், வரும் டிசம்பர் 21 முதல் பினாங்கில் இருந்து சென்னை இடையே தினசரி நேரடி விமான சேவையை தொடங்குவதாக அறிவித்துள்ளது.
இந்த புதிய பாதையானது கோலாலம்பூர் மற்றும் லங்காவிக்குப் பிறகு மலேசியாவிலிருந்து நேரடி விமான சேவையைப்பெறும் மூன்றாவது இடமாக பினாங்கையும் இணைத்துள்ளது.
இரு நகரங்களுக்கு இடையேயான பயணத்திற்கான அதிகரித்து வரும் தேவையை பூர்த்தி செய்வதற்காக, சென்னையில் இருந்து பினாங்கிற்கு நேரடி விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது என்று கூறிய IndiGo விமான நிறுவனம், இந்த புதிய விமான சேவை சுற்றுலாவை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல் வர்த்தக உறவுகளையும் மேம்படுத்தும் என்றும் அது தெரிவித்துள்ளது.