ஜாசின்:
கம்போங் லான்சாங் அருகே உள்ள ஜாலான் ஜாசின் மெர்லிமாவ் என்ற இடத்தில், மூவர் பயணித்த டாக்ஸி சறுக்கி, பாலத்தின் சுவரில் மோதியதில் அதன் கேஸ் சிலிண்டர் வெடித்து, அம்மூவரும் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்கள் தாமான் முஹிப்பாவைச் சேர்ந்த 71 வயதான டாக்ஸி ஓட்டுநர் எஸ்.சுப்ரமணியம் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மேலும் அதில் பயணித்த தம்பதிகள் மெர்லிமாவில் உள்ள ஃபெல்க்ரா லெம்பா கேசாங்கைச் சேர்ந்த ஹுசாலி உமர், 84, மற்றும் மஸ்துரா சைட், 60 என அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று, ஜாசின் மாவட்ட காவல்துறை துணைத் தலைவர் அமாட் ஜமீல் ரட்ஸி கூறினார்.
குறித்த டாக்ஸி கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் சுவரில் மோதி, விபத்துக்குள்ளானது என்றும், இந்த மோதலின் தாக்கத்தால் என்ஜிவி சிலிண்டர் வெடித்து சிதறியதாக நம்பப்படுகிறது என்றும் அவர் சொன்னார்.
மேலும் அதில் பயணித்த மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர் என்றும் DSP அமாட் ஜமீல் கூறினார்.




















