தொடர்ந்து அதுபோல் ஆட சொன்னால் எப்படி? தமன்னா வேதனை

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் தமன்னா தற்போது இந்தி படங்களிலும் நடித்து வருகிறார். ஒரு பாடலுக்கு குத்தாட்டமும் ஆடுகிறார்.

ஜெயிலர் படத்தில் காவாலயா பாடலுக்கு தமன்னா ஆடிய குத்தாட்டம் ரசிகர்களை கவர்ந்தது. அந்த பாடல் சமூக வலைத்தளத்தையும் உலுக்கியது.இதுபோல் சமீபத்தில் ஸ்த்ரி 2 இந்தி படத்திலும் ஆஜ் கிராத் குத்துப்பாடலில் தமன்னா அற்புதமாக நடனம் ஆடி இருந்தார். இந்த படம் ரூ.900 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது.

தமன்னாவின் குத்தாட்டம் இடம்பெற்றால் அந்த படம் வெற்றி பெறும் என்ற சென்டிமெண்ட் திரையுலகில் பரவி உள்ளது. இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் பணப்பெட்டியுடன் தமன்னா வீடு முன்னால் திரண்டு தங்கள் படங்களில் ஆட அழைப்பு விடுத்து வருகிறார்கள்.

இதனால் கடுப்பான தமன்னா கூறும்போது, “நான் ஆடிய ஓரு பாடல் அந்த படத்தின் வெற்றிக்கு உதவி செய்தால் மகிழ்ச்சிதான்.அதற்காக நான் குத்தாட்ட நடிகை என்ற ரீதியில் தொடர்ந்து அதுபோல் ஆட சொன்னால் எப்படி? ஜெயிலர் ரஜினி படம் என்பதால் குத்தாட்டம் ஆடினேன். ஸ்த்ரீ 2 பட இயக்குனர் அமர் கவுஷிக் எனது நண்பர் என்பதால் அவர் கேட்டதும் மறுக்க முடியாமல் ஆடினேன்.தொடர்ந்து அதுபோன்று பாடல்களில் ஆட நான் ஒன்றும் குத்தாட்ட நடிகை அல்ல” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here