பயணப் பையில் மனித உடல்

காஜாங், பாண்டார் துன் ஹூசேன் ஓன், செராஸ் பெர்டானா மக்கள் குடியிருப்புக்கு அருகில் கொடிய நாற்றத்துடன் ஒரு பயணப்பை சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் கிடப்பதாக போலீசுக்கு பொது மக்கள் தகவல் தந்தனர்.

தகவல் கிடைக்கப்பெற்ற உடன் தடயவியல், கே9 எனப்படும் மோப்ப நாய் ஆகிய பிரிவுகளின் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர் என்று காஜாங் மாவட்ட ஓசிபிடி ஏசிபி நாஸ்ரோன் அப்துல் யூசோப் கூறினார்.

பெட்டியை திறந்து பார்த்ததில் ஓர் ஆடவரின் சடலம் அதற்குள் இருந்தது. அடையாள ஆவணங்கள் எதுவும் அதில் இல்லை. அச்சடலம் சவப்பரிசோதனைக்காக செர்டாங் மருத்துவமனையின் தடயவியல் பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது என்று அவர் சொன்னார்.

இச்சம்பவம் குறித்து தகவல் தெரிந்தவர் 012-6114900 என்ற எண்ணில் புலன் விசாரணை அதிகாரி ஏஎஸ்பி உமேஷ் ரத்னகுமாருடன் தொடர்பு கொள்ளும்படி நாஸ்ரோன் கேட்டுக்கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here