கோலாலம்பூர்:
மருத்துவ அதிகாரிகள் மீதான் 4 பகடிவதை புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ஜூல்கிப்ளி அமாட் தெரிவித்துள்ளார்.
கடந்த செப்டம்பர் மாதம் வரை 355 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இன்று நாடாளுமன்றத்தில் அளித்த எழுத்துபூர்வமான பதிலில் அவர் கூறினார்.
குறித்த புகார்கள் தொடர்பில் பொது அதிகாரிகள் விதிமுறைகள் 1993 மற்றும் நடைமுறையில் உள்ள பிற விதிமுறைகளின்படி நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றும், விசாரணைகளின் பின்னர் அவை உண்மையில் பகடிவதைதானா என்பது உறுதிச் செய்யப்படும் என்றும் அவர் சொன்னார்.