கோலாலம்பூர்:
தாய்லாந்து பிரதமர் பேடோங்டார்ன் ஷினவத்ரா நாளை திங்கள்கிழமை (டிசம்பர் 16) மலேசியாவிற்கு தனது முதல் அதிகாரப்பூர்வ விஜயத்தை மேற்கொள்கிறார்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமினின்அழைப்பின் பேரில், இந்த ஆண்டு ஆகஸ்டில் பதவியேற்ற பிறகு பேடோங்டரின் தனது முதல் அதிகாரப்பூர்வ பயணத்தை மலேசியாவிற்கு மேற்கொள்கிறார் என்று வெளியுறவு அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பெடோங்டார்னுக்கு புத்ராஜெயாவில் உள்ள பெர்டானா புத்ரா வளாகத்தில் அதிகாரப்பூர்வ வரவேற்பும், அதைத் தொடர்ந்து பிரதமர் அன்வாருடனான இருதரப்பு சந்திப்பும் நடைபெறும் என்று அவ்வறிக்கையில் அது குறிப்பிடப்பட்டுள்ளது.