கோலாலம்பூர்:
கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை முன்னிட்டு, வரும் டிசம்பர் 23 மற்றும் 24 ஆம் தேதிகளில், தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிப்பவர்களுக்கு டோல் கட்டண விலக்கு அளிக்கப்படுகிறது.
அதற்கமைய அனைத்து தனியார் வாகனங்களுக்கும் வரும் திங்கள்கிழமை 12.01 மணி முதல் செவ்வாய்கிழமை இரவு 11.59 மணி வரை இலவசக் கட்டணச் சேவை அமல்படுத்தப்படும் என்று பொதுப்பணித்துறை அமைச்சர் அலெக்சாண்டர் நந்தா லிங்கி இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மேலும் இதற்கான செலவு RM38 மில்லியனாக இருந்தாலும் அதை மத்திய அரசு பொறுப்பேற்கிறது எனவும் அவர் சொன்னார், குறிப்பாக கிறிஸ்தவர்கள் இந்த சலுகையை பயன்படுத்தி தமது கொண்டாட்டங்களை அனுபவிக்க ஒரு வாய்ப்பை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.
அதே நேரம் பங்குனான் சுல்தான் இஸ்கண்டர் (BSI) சுங்கச்சாவடி மற்றும் ஜோகூரில் உள்ள தஞ்சோங் குபாங் சுங்கச்சாவடிகள் என்பவற்று இந்த கட்டண விலக்கு பொருந்தாது என்றும் அவர் சொன்னார்.