கோத்தா கினபாலு:
ஜாலான் லிண்டாஸ் பகுதியில் கார் கால்வாயில் கவிழ்ந்ததில், மனைவி உயிரிழந்தார் அதேநேரம் கணவர் மற்றும் இரு பிள்ளைகள் காயமடைந்தனர்.
இராமானிஸ் பகுதியில் நேற்றிரவு 9 மணியளவில் நடந்த இந்தச் சம்பவத்தில், காரின் முன்பக்கத்தில் அமர்ந்திருந்த 58 வயதுப் பெண், அவரது 61 வயது கணவர் ஓட்டிச் சென்ற காரில் இருந்து சுமார் 50 மீட்டர் தூரத்தில் தூக்கி வீசப்பட்டார்.
கார் ஓட்டுநரான கணவர் காயங்களுக்கு உள்ளானார், அதே சமயம் 23 மற்றும் 15 வயதுடைய அவர்களது மகன்களுக்கும் காயங்கள் ஏற்பட்டதாகவும், சம்பவம் நடந்தபோது குடும்பம் இனனாமில் இருந்து பெடகாஸில் உள்ள அவர்களது வீட்டிற்குச் சென்றதாக கோத்தா கினபாலு காவல்துறைத் தலைவர் துணை ஆணையர் காசிம் மூடா தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டவரின் கணவர் பாதையை மாற்ற முயன்றார், ஆனால் மற்றொரு வாகனம் திடீரென வந்ததால் கார் கட்டுப்பாட்டை இழந்து, 40 வயதுடைய ஆடவர் ஒருவர் ஓட்டிச் சென்ற மற்றொரு வாகனத்தின் மீது மோதியது,” என்று அவர் இன்று (டிச. 23) வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
மோதலின் காரணமாக, சாலையின் இடதுபுறம் உள்ள பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இவ்வழக்கு சாலை போக்குவரத்து சட்டம் 1987 பிரிவு 41(1)ன் கீழ் கவனக்குறைவாக அல்லது ஆபத்தான வாகனம் ஓட்டி மரணத்தை ஏற்படுத்தியதற்காக விசாரிக்கப்பட்டு வருகிறதுஎன்று அவர் மேலும் கூறினார்.