(Our Reporter தி.மோகன்)
கோலாலம்பூர்,
தலைநகரில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் நாடறிந்த விற்பனை மையமான NSK Grocers பாகிஸ்தான் மாம்பழக் கொண்டாட்டம் எனும் பிரத்தியேக விற்பனை கண்காட்சியை (Pakistani Mango Fest) ஏற்பாடு செய்துள்ளது.

நேற்று இந்த கொண்டாட்டத்தில் பாகிஸ்தானைச் சேர்ந்த பலதரப்பட்ட மாம் பழங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டன. அதிலும் ஜூஸ், கேக், ஊறுகாய் உள்ளிட்ட பல்வேறு மாம்பழம் சார்ந்த உணவு வகைகளும் விற்பனையில் இருந்தன.
இந்த பிரத்தியேக விற்பனை நிகழ்வில் மலேசிய அரசாங்கத் தரப்பினர், என்எஸ்கே பிரதிநிதிகள், மலேசியா பாகிஸ்தான் வர்த்தக மன்றம், பழ-காய்கறிகளின் முன்னணி இறக்குமதியாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய பாகிஸ்தான் தூதர் சைட் அசான் ராஸா ஷா, இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தக நல்லுறவை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள், பாகிஸ்தான் விவசாயத்துறை வலிமை குறித்து பேசினர்.
அதிலும் பாகிஸ்தானில் பழ வகைகளின் ராஜா வாக கருதப்படும் மாம்பழத்தின் சிறப்பம்சம் குறித்தும் அவர் விவரித்தார். அதிலும் உலக அளவில் சிறந்த பழ வகைகளின் உற்பத் தியாளர்களுள் பாகிஸ்தானும் இடம்பெற்றிருப் பதாக அவர் கூறினார்.
தொடர்ந்து பாகிஸ்தான் மாம்பழ வகைகளை இங்கு சந்தைப்படுத்தும் மலேசிய இறக்கும தியாளர்களையும் தூதர் பாராட்டினார். இந்த பிரத்தியேக விற்பனை கண்காட்சி பொது மக்களுக்காக நாள் முழுவதும் நடத்தப்பட்டது.




















