மாஸ்கோ:
மலேசியா, பெலாரஸ், பொலிவியா, இந்தோனேசியா, கஜகஸ்தான், தாய்லாந்து, கியூபா, உகாண்டா மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் 2025 ஜனவரி 1 முதல் அதிகாரப்பூர்வமாக BRICS கூட்டமைப்பில் இணைகின்றன என்று கிரெம்ளின் உதவியாளர் யூரி உஷாகோவ் தெரிவித்தார்.
“கசானில் உச்சிமாநாட்டிற்கு முன்னதாக, BRICS கூட்டமைப்பில் இணைவதற்கான 35 விண்ணப்பங்கள் வந்தன” என்றும், சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு BRICS கூட்டமைப்பில் இணைவதற்கான முன்மொழிவு ஆவணங்கள் வழங்கப்பட்டு விட்டதாகவும் அவர் சொன்னார்.