நானிங்:
மலேசியா- சீனாவிற்கிடையே மொத்தம் RM19.84 பில்லியன் மதிப்புள்ள மூன்று புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் (MOUs) கையெழுத்திடப்பட்டுள்ளன.
கழிவிலிருந்து எரிசக்தி தயாரிக்கும் ஆலைகள் அமைப்பது தொடர்பில் ஒத்துழைப்பு குறித்து ஆராய்தல், சேமிப்பு மற்றும் தளவாடம், செம்பனை எண்ணெய் வணிக, விநியோக மையம் ஆகியவை தொடர்பில் புரிந்துணர்வுக் குறிப்புகள் கையெழுத்தாகின.
இவற்றுக்கான கையெழுத்திடும் நிகழ்வுகள் இன்று ஞாயிற்றுக்கிழமை பிரதமர் அன்வார் இப்ராகிம் முன்னிலையில் இடம்பெற்றன.
இருபதாவது சீனா-ஆசியான் கண்காட்சியிலும் சீனா-ஆசியான் தொழில், முதலீட்டு உச்சநிலை மாநாட்டிலும் பங்கேற்பதற்காக அன்வார் சீனாவின் நான்னிங் நகருக்கு ஒருநாள் பயணம் மேற்கொண்டுள்ளார்.
அங்கு அன்வார் முறையே சீனா கம்யூனிகேஷன்ஸ் கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி (CCCC) மற்றும் Huawei நிறுவனம் ஆகியவற்றுடன் தனித்தனியாக பேச்சு நடத்தவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
மேலும் நாளை திங்கட்கிழமை (செப்டம்பர் 18) நடைபெறவுள்ள நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொள்வதற்காக பிரதமர் இன்று ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 17) கோலாலம்பூர் திரும்புவதாக கூறப்படுகிறது.



















