கிளந்தான், ஜோகூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 63 பேர் இன்னமும் அங்குள்ள நிவாரண மையங்களில் தங்கியுள்ளனர்

கோலாலம்பூர்:

ன்று காலை 8 மணி நிலவரப்படி, வெள்ளம் காரணமாக வாழ்விடங்களைவிட்டு வெளியேற்றப்பட்டவர்கள் 63 பேர் கிளந்தான் மற்றும் ஜோகூரில் உள்ள தற்காலிக நிவாரண மையங்களில் தங்கியுள்ளனர்.

சமூக நலத்துறையின் Infobencana போர்டல் அடிப்படையில், கிளந்தான் பாசிர் மாஸில் இருந்து வெளியேற்றப்பட்ட 36 பேர் இன்னும் செக்கோலா கெபாங்சான் குவால் டோக் டே, ராந்தாவ் பஞ்சாங்கில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளது. இந்த எண்ணிக்கை நேற்று முதல் மாறாமல் உள்ளது.

அதேநேரம் நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் திணைக்களத்தின் இணையத்தளத்தின்படி, கிளந்தானில் உள்ள கோலோக் ஆறு, தற்போது 7.70 மீட்டர் எச்சரிக்கை மட்டத்தில் இருப்பதாக குறிப்பிடுள்ளது.

இந்நிலையில் ஜோகூரில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் மாறாமல், 27 ஆக உள்ளது என்று மாநில பேரிடர் மேலாண்மைக் குழுத் தலைவர் டான்ஸ்ரீ டாக்டர் அஸ்மி ரோஹானி தெரிவித்துள்ளார்.

இவர்கள் அனைவரும் கோத்தா திங்கியில் உள்ள கம்போங் பெர்பாட் பல்நோக்கு மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here