தீப்பிடித்த வீட்டின் அருகே உள்ள வாய்க்காலில் ஆடவரின் சடலம் கண்டெடுப்பு

சிபு:

சுங்கை பிடுட்டின் ஜாலான் கோக் தியோங்கில் நேற்று இரவு தீ விபத்தில் எரிந்து நாசமான வீட்டின் அருகே உள்ள வாய்க்காலில் ஆடவர் ஒருவர் இறந்து கிடக்க கண்டெடுக்கப்பட்டார்.

Ngu Hieng Sie, 58 என அடையாளம் காணப்பட்ட அந்த நபரின் சடலம், தண்ணீர் நிரம்பிய பள்ளத்தில் முதுகு தரையில் படும்படியாக மல்லாந்த நிலையில் கிடந்தது என்று, சிபு , தீயணைப்பு மற்றும் மீட்புத் துறைத் தலைவர் ஆண்டி அலி கூறினார்.

சம்பவம் தொடர்பில் இரவு 7.50 மணிக்கு அழைப்பு வந்ததாகவும், உடனடியாக அந்த இடத்திற்குத் தீயணைப்புத்துறையினர் அனுப்பப்பட்டதாகவும் அவர் கூறினார்.

“சம்பவம் நடந்த இடத்திற்கு அருகில் தண்ணீர் நிரம்பியிருந்த பள்ளத்தில் அந்த நபரை PKO கண்டுபிடித்ததாகவும், அவர் மின்சாரம் தாக்கி இறந்ததாக நம்பப்படுகிறது என்றும், ஏனெனில் ஆய்வின் போது குறித்த நீர்நிலை பகுதியில் மின்சாரம் இருந்தது,” என்றும் அவர் சொன்னார்.

பாதிக்கப்பட்டவரின் சடலம் மேலதிக நடவடிக்கைக்காக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கோரினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here