ஜோகூரில் ஓய்வு பெற்ற பொறியாளர் கிரிப்டோ மோசடியில் RM9.5 மில்லியனை இழந்தார்

டணிஸ்தா சுரேஸ்

ஜோகூர்,

ஜோகூரை சேர்ந்த 63 வயதுடைய பொறியாளர் ஒருவர் போலி கிரிப்தோ கரன்சி முதலீட்டில் 9.5 மில்லியன் ரிங்கிட்டை இழந்துள்ளார்.

பிட்கொயின் – முதலீடு வாயிலாக அதிக பணம் சம்பாதிக்கலாம் என்ற போலி ஆன்லைன் விளம்பரத்தை நம்பி, கடந்த ஆண்டு அக்டோபர் முதல் டிசம்பர் வரை அவ்வாடவர் 11 வெவ்வேறு வங்கி கணக்குகளில் 29 முறை பணம் செலுத்தியுள்ளார்.

ஜோகூரில் ஓய்வு பெற்ற பொறியாளர் கிரிப்டோகரன்சி மோசடியில் RM9.5 மில்லியனை இழந்தார் — படத்தொகுப்பு

இதனை அடுத்து அவர் செய்த முதலீட்டின் வாயிலாக தமக்கு 88 மில்லியன் ரிங்கிட் கிடைத்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.

இருப்பினும் முதலீட்டிலிருந்து பணத்தை எடுப்பதற்காக மேலும் 8 லட்சம் ரிங்கிட் கட்டவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டதை அடுத்து, தாம் மோசடி செய்யப்பட்டுள்ளதை உணர்ந்துள்ளார்.

இதனிடையே பாதிக்கப்பட்டவர், போலி முதலீட்டை நம்பி செயலி ஒன்றை பதிவிறக்கம் செய்ததாக ஜோகூர் போலீஸ் தலைவர் டத்தோ மு.குமார் கூறினார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here