மூன்று வாகனங்கள் மோதிய விபத்தில் முதியவர் பலி!

பண்டார் பெர்மைசூரி:

ங்குள்ள கம்போங் பெரிஸ் டோக் கு அருகே உள்ள ஜாலான் கோல திரெங்கானு-கம்போங் ராஜா சாலையின் KM68 இல் மூன்று வாகனங்கள் மோதிய விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்தார்.

இன்று வெள்ளிக்கிழமை (ஜனவரி 17) காலை 8.30 மணியளவில் நடந்த இந்தச் சம்பவத்தில், 68 வயதான பௌசாய் சுலைமான் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக செத்தியூ மாவட்ட காவல்துறைத் தலைவர் டிஎஸ்பி முகமட் ஜைன் மாட் டிரிஸ் தெரிவித்தார்.

“பாதிக்கப்பட்டவர் தனது மனைவி மற்றும் மகளுடன் கிளந்தானின் பச்சோக்கிலிருந்து இங்குள்ள ரு செபுலுவுக்குச் சென்று கொண்டிருந்தார் என்று முதற்கட்ட விசாரணையில் அறியப்பட்ட்தாக அவர் மேலும் கூறினார்.

பாதிக்கப்பட்டவரது கார் மற்றொரு வாகனத்தை முந்திச் செல்ல முயன்றபோது விபத்து ஏற்பட்டதாக நம்பப்படுகிறது என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

இந்த விபத்தில் நான்கு பேர் காயமடைந்ததாகவும், பௌசாயின் உடல் பிரேத பரிசோதனைக்காக செத்தியூ மருத்துவமனையின் தடயவியல் பிரிவுக்கு அனுப்பப்பட்டது, மேலும் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அதே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர் என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here