டணிஸ்தா சுரேஸ்
கோலாலம்பூர்,
பட்டர்வொர்த்தில் உள்ள பிறை தொழிற்பேட்டை பகுதியில் செயல்படும் ஒரு தொழிற்சாலையில் பாய்லர் எனும் கொதிகலன் வெடித்தது. அதன் தாக்கத்தில் மிகப்பெரிய தீச்சம்பவம் நிகழ்ந்தது.
ஜனவரி 17 ஆம் தேதி மாலை 4.40 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் அடர்த்தியான கரும் புகை விண்ணோக்கி எழும்பியது. இதனால் அருகில் வசிக்கும் மக்களும் வாகனமோட்டிகளும் பதற்றமடைந்தனர்.
அவசர அழைப்பு கிடைக்கப்பெற்ற பின்னர் தீயணைப்பு – மீட்பு நிலையங்களிலிருந்து தீயணைப்பு அதிகாரிகளும் வீரர்களும் தொண்டூழிய தீயணைப்பு படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
அந்த டேப் தயாரிப்பு தொழிற்சாலையில் சம்பவம் நிகழ்ந்த நேரத்தில் அதன் அலுவலகத்திலும் தொழிற்சாலையிலும் 80 பணியாளர்கள் இருந்தனர். அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.

