கூச்சிங்கில் மூடப்படாத வடிகாலில் தவறி விழுந்த பெண்; பாதுகாப்பாக மீட்ட தீயணைப்புத்துறை

கூச்சிங்:

ஜாலான் சிம்பாங் 3-இல் உள்ள கூட்டாட்சி வளாகத்தில் உள்ள தனது பணியிடத்திற்கு நடந்து செல்லும் போது, அங்கிருந்த மூடப்படாத கால்வாயில் விழுந்த 21 வயது பெண்ணை தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பாக மீட்டனர்.

சம்பவம் குறித்து காலை 6.08 மணிக்கு தகவல் கிடைத்ததாக படுங்கான் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை செயல்பாட்டுத் தளபதி பிலிப் அனக் டுகாட் தெரிவித்தார்.

குறித்த பெண் சாலையின் நடுவில் ஏழு அடி ஆழமுள்ள வடிகாலில் விழுந்ததாகவும், அந்த வடிகால் அவருக்கு மிகவும் உயரமாக இருந்ததால் அவளால் வெளியே ஏற முடியவில்லை,” என்றும் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் அவர் தெரிவித்தார்.

இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் வலது காலில் சிறிய கீறல்கள் மட்டுமே ஏற்பட்டன என்றும், இருப்பினும் தீயணைப்பு வீரர்கள் அவரை வடிகாலில் இருந்து மீட்டபின் சம்பவ இடத்திலேயே ஆரம்ப சிகிச்சை அளித்தனர் என்றும் அவர் சொன்னார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here