கோலாலம்பூர்:
எரிப்பொருள் விலையைக் குறைப்பது தொடர்பில் எந்த சாத்தியமும் இல்லை என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.
15 ஆண்டுகளுக்கு முன்பு கச்சா எண்ணெய் விலை குறைப்பதாக அளித்த வாக்குறுதியை பலர் பயன்படுத்திக் கொண்டு, இப்போது அந்த வாக்குறுதியை நிறைவேற்றுமாறு கோருகிறார்கள் என்பதை நான் அறிவேன்.
தற்போது, நாட்டில் ஒரு லிட்டர் எரிப்பொருள் RM2.05 க்கு விற்பனை செய்யப்படுகின்றது. இதற்காக அரசாங்கம் 30 பில்லியனிலிருந்து 40 பில்லியன் வரை மானியம் செலவிடப்படுவதாக அவர் சுட்டிக் காட்டினார்.
சவுதி அரேபியாவுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு எரிப்பொருள் விலை மலேசியாவை விட அங்கு அதிகமாக உள்ளது. இதைவிட அரசு எவ்வளவு மலிவாக விற்பனை செய்ய முடியும்?
எண்ணெய் விலை ஏன் இன்னும் குறையவில்லை? இதுதான் என் பதில் என்று பிரதமர் தனது பேஸ்புக்கில் வெளியிடப்பட்ட ஒரு வீடியோ பதிவில் தெரிவித்தார்.





















