முருகா முருகா என்று சொன்னால் உருகாத மனமே கிடையாது. முருகன் என்ற வார்த்தைக்குள் அத்தனை சக்திகள் அடக்கம். துன்பம் வரும் நேரத்தில் முருகா என்று நினைத்து, கூப்பிட்டு பாருங்கள். கூப்பிட்டு குரலுக்கு அந்த முருகன் ஓடோடி வந்து உதவிகளை செய்து விடுவான். முருகனுக்கு உகந்த திருநாள் தைப்பூசமானது இன்னும் ஒரு சில நாட்களில் வரவிருக்கிறது. முருகனுக்கு மாலை போட்டுக்கொண்டு 48 நாள் விரதம் இருப்பவர்கள் இருக்கிறார்கள்.21 நாள் விரதம் இருப்பவர்கள் இருக்கிறார்கள். நாம் முருகனுக்கு என்ன செய்யப் போகின்றோம்.
பக்தர்கள் இதை செய்தால் மட்டும் தான், கேட்ட வரம் கொடுப்பேன் என்று முருகன் ஒருபோதும் சொன்னதில்லை. இருந்தாலும் முருகனுக்காக மனம் உருகி எளிமையான வழிபாட்டை செய்யும் போது அதில் கிடைக்கும் நிம்மதி நமக்கு பெரிய அளவில் நன்மைகளை செய்யும். அந்த வகையில் வரக்கூடிய தைப்பூச நாளில் முருகனை நாம் முழுமையாக சென்றடைய வேண்டும் என்றால், இன்றிலிருந்து நம்முடைய வீட்டில் உச்சரிக்க வேண்டிய மந்திரம் என்ன, செய்ய வேண்டிய வழிபாடு என்ன ஆன்மீகம் சார்ந்த தகவலை தெரிந்து கொள்வோமா.
என்னால் முருகனுக்கு வேண்டி மாலை போட்டுக் கொள்ள முடியவில்லை. பெரிசாக வழிபாடுகள் செய்து விரதத்தை கடைபிடிக்க முடியவில்லை என்பவர்களுக்கு இந்த பதிவு சமர்ப்பணம். இன்று துவங்கி தினம் தோறும் பூஜை அறையில் காலை நேரத்திலோ மாலை நேரத்திலோ, முருகனுக்கு முன்பு விளக்கு ஏற்றி முருகனுக்கு ஒரு பூவை வைத்து, இரண்டு உலர் திராட்சையோ கல்கண்டோ நெய்வேத்தியம் வையுங்கள்.
அந்த முருகன் முன்பு அமர்ந்து உங்கள் வாழ்க்கையில் இருக்கும் தீராத ஒரு துன்பத்தை, முருகன் பாதத்தில் இறக்கி வையுங்கள். இந்த தைப்பூசம் முடிவதற்குள், “அப்பா முருகா இந்த ஒரு பிரச்சினையை தீர்த்து வையப்பா” என்று சொல்லிவிட்டு இந்த மந்திரத்தை மட்டும் ஒரே ஒரு முறை படித்துவிட்டு உங்களுடைய வேலையை துவங்குங்கள் போதும்.
11-02-2025 அன்றுதான் தைப்பூசத் திருநாள் வரவிருக்கிறது. அந்த நாள் வரை இந்த மந்திரத்தை வீட்டில் சொல்ல வேண்டும். தைப்பூசத்தன்று வீட்டு பக்கத்தில் இருக்கும் கோவிலுக்கு சென்று முருகனின் முன்பு இந்த மந்திரத்தை சொல்லி உங்களுடைய விரதத்தை நிறைவு செய்து கொள்ள வேண்டும்.
முருகன் மந்திரம்
ஓம் முருகா, குரு முருகா, அருள் முருகா, ஆனந்த முருகா
சிவசக்தி பாலகனே ஷண்முகனே சடாக்ஷ்ரனே
என் வாக்கிலும் நினைவிலும் நின்று காக்க
ஓம் ஐம் ஹ்ரீம் வேல் காக்க சுவஹா
அகத்திய முனிவர் நமக்காக அளித்த அதிசக்தி வாய்ந்த முருகர் மந்திரம் இது. இந்த மந்திரத்தை இன்று துவங்கி தைப்பூசம் வரை சொல்பவர்கள் வாழ்வில் இருக்கும் தீரா துன்பம் தீரும். காரிய தடை விளக்கும். திருமண தடை விலகும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். நல்ல வேலை கிடைக்கும். கடன் சுமை தீரும். வீடு வண்டி வாகனம் வாங்க வேண்டும் என்ற ஆசை நிறைவேறும். இத்தனையும் ஒட்டுமொத்தமாக முருகனைக் கேட்டு குழப்பி விடாதீர்கள்.
உங்களுடைய வாழ்க்கையில் உங்களுக்கு என்ன தேவை இருக்கிறது அதை மட்டும் முருகனிடம் கேளுங்கள். தைப்பூசம் அன்று மனமகிழ்ச்சியோடு இருக்கும் முருகன், நீங்கள் கேட்டதை கொண்டு வந்து உங்கள் கையில் கொடுப்பான். கலியுகத்தில் முருகன் நேராக வரமாட்டான். ஏதாவது ஒரு மனித ரூபத்தில் உங்களுக்கு நிச்சயம் உதவி செய்வான். நம்பிக்கை உள்ளவர்களுக்கு தைப்பூச தின நாளில் ஏதாவது ஒரு ரூபத்தில் முருகன் தரிசனம் நிச்சயம் கிடைக்கும்.





















