தைப்பூசம்: கெடாவில் பிப்ரவரி 11 ஆம் தேதி பொது விடுமுறையாக அறிவிப்பு

அலோர் ஸ்டார்:

தைப்பூச திருவிழாவை முன்னிட்டு வரும் பிப்ரவரி 11 (செவ்வாய்க்கிழமை) தேதியை பொது விடுமுறையாக கெடா மாநில அரசு அறிவித்துள்ளது.

இன்று மாநில மற்றும் மத்திய துறைத் தலைவர்களுக்கு எழுதிய அதிகாரப்பூர்வ கடிதத்தில், குறித்த விடுமுறை தொடர்பில் கெடா துணை மாநில செயலாளர் டத்தோ டாக்டர் நட்ஸ்மான் முஸ்தபா அறிவித்துள்ளார்.

இந்த பொது விடுமுறையானது விடுமுறைச் சட்டம் 1951 (சட்டம் 369) இன் பிரிவு 9(1) இன் கீழ் உள்ள விதிகளுக்கு இணங்குவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here