தஞ்சோங் லம்பூர் பாலம் அருகே கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலம்; கொலைச் சந்தேக நபரை போலீஸ் அடையாளம் கண்டுள்ளது

குவந்தான்:

ஞ்சோங் லம்பூர் பாலம் அருகேயுள்ள ஆற்றங்கரையில் நேற்று சடலமாக கண்டெடுக்கப்பட்ட பெண்னை கொலை செய்ததாக நம்பப்படும் ஆடவர் ஒருவரை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்.

விசாரணைகளின் அடிப்படையில் அதே மாவட்டத்தில் வசிக்கும் 37 வயதுடைய நபரை போலீசார் இப்போது கண்காணித்து வருகின்றனர் என்று, பகாங் மாநில காவல்துறைத் தலைவர் டத்தோஸ்ரீ யஹாயா ஓத்மான் கூறினார்.

முந்தைய குற்றப் பின்னணியைக் கொண்ட குறித்த சந்தேகநபர், உணவு விற்பனையாளரான பாதிக்கப்பட்டவருடன் எந்தத் தொடர்பும் கொண்டிருக்கவில்லை, இருப்பினும் சந்தேக நபர் அந்தப் பெண்ணிடம் உணவு ஆர்டர் செய்ததாகவும், அவர்கள் பணத்தை நேரடியாக பரிமாற்றம் (COD) செய்வதற்காக சம்பவ இடத்தில் சந்தித்ததாகவும் தெரியவருகிறது.

“ஆரம்ப விசாரணையில் பெண்ணின் நகைகளைக் காணவில்லை என்றும், அவரது உடலில் காயங்கள் இருந்ததற்கான அறிகுறிகள் இருப்பதாகவும் தெரியவந்தது,” என்று அவர் கூறினார்.

இந்த வழக்கு குற்றவியல் சட்டம் பிரிவு 302 இன் கீழ் விசாரிக்கப்படுகிறது.

நேற்று, 37 வயதுடைய பெண் ஆற்றங்கரையில் நண்பகல் வேளையில் இறந்து கிடக்க கண்டெடுக்கப் பட்டது தொடர்பான செய்தியை ஊடகங்கள் வெளியிட்டிருந்தது நினைக்கூரத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here