மானிய உதவி: நன்மையை விட தீங்கு அதிகம் பொருளாதார நிபுணர்கள் கருத்து

மடானி அரசாங்கத்தின் மானிய உதவிகள் அனைவருக்கும் பொதுவாக தொடரும் வரை மக்கள் அதனை ஓர் உரிமையாக கருதத் என்று பொதுமக்கள் தொடங்கும் பட்சத்தில் சீர்திருத்தங்களை செய்வது மேலும் கடினமாகிறது என்று பொருளாதார நிபுணர்கள் நம்புகின்றனர்.

மொத்தத்தில் மானிய உதவி என்பது நன்மையை காட்டிலும் தீமைகள் தான் அதிகம்.    

எரிபொருளுக்கான மானிய உதவித் தொகை, செலவுகள் அதிகரிப்பில் இருந்து மக்களின் சுமைகளை குறைத்தாலும் எதிர்பாராத தாக்கங்கள் இருக்கவே செய்கின்றன.

மானிய உதவித் தொகை மிக நீண்ட காலமாகவே மக்களின் வாழ்க்கைச் செலவீனங்களை குறைப்பதில் அதி முக்கிய அம்சமாக இருந்து வருகிறது.

ஆனால், இந்த மானிய உதவித் தொகையை தொடர்ந்து நிலைநிறுத்துவதற்கு ஆகும் செலவுகள் நாம் நினைப்பதை காட்டிலும் மிக அதிகம் என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரிகைகின்றனர்.

எரிபொருளுக்கான மானிய உதவித் தொகை வாழ்க்கை செலவீன சுமைகளிலிருந்து மக்களை பாதுகாக்க உதவுகிறது. அதேசமயம் அளவுக்கு அதிகமான செலவுகள், கசிவு, உயர் வருமான பிரிவினருடனான சமச்சீரற்ற நிலை போன்ற அம்சங்கள் எதிர்பாராத தாக்கங்களை ஏற்படுத்துகின்றன என்று பொருளாதார நிபுணர் ஜியோஃபெரி வில்லியம்ஸ் கூறுகிறார்.

ஒரு நெருக்கடிமிக்க காலக்கட்டம் இருந்தது. ஆனால் அரசாங்கம் அதனை கடந்து விட்டது. இந்நிலையில் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட மானிய உதவியை அமல்படுத்துவது அவசியமாகிறது என்று அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.

மானிய உதவி செலவு என்பது அதன் நோக்கம் கொண்ட நன்மைகளை விட சவால்கள் அதிகமாக இருக்கும் போது பொதுவாக ஏற்படும் சமச்சீரற்ற நிலை அதிகரிப்பு மூலம் இந்த நிலை சுட்டிக்காட்டப்படுகிறது என்று அவர் கூறினார்.

இருப்பினும் சவால் மானியங்களின் செலவுகளில் மட்டும் அல்ல கட்டுப்பாடின்றி விடப்பட்டால் ஏற்படும் விளைவுகளும் அதிகம் தான் என்று ஜியோஃபெரி வில்லியம்ஸ் கூறினார்.

நடவடிக்கை எடுக்காவிட்டால் ஏற்படும் விளைவுகள்

மானியங்கள் மோசமானதாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. நடப்பு நடைமுறைகள் பெரும்பாலும் குறைந்த தேவைகள் உள்ளவர்களுக்கு நன்மை அளிக்கின்றன என்று பொருளாதார நிபுணர் மெடலின் பெர்மா தெரிவித்தார்.

இலக்கு சரியாக இல்லை. பணக்கார தரப்பினர், பாதிக்கப்படாதவர்களே பெரும்பாலான நன்மைகளை உறிஞ்சுகின்றனர் என்று அவர் குறிப்பிட்டார்.

டீசலுக்கான மானியத்தை இலக்கு வைப்பதில் அரசாங்கம் முன்னேற்றம் அடைந்துள்ளது. இதன் அடிப்படையில் பூடி மடானி (BUDI MADANI) திட்டம் போன்ற இலக்கு வைக்கப்பட்ட முயற்சிகளை முன்னெடுத்திருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

இத்திட்டத்தின் கீழ் 7 பில்லியன் ரிங்கிட்டை சேமிக்க முடிந்தது, கடத்தல் மேலும் கசிவுகளையும் குறைக்க முடிந்தது என்று மெடலின் பெர்மா சொன்னார்.

இதனிடையே இலக்கு வகுப்பது தாமதமானால் பொதுவான மானியங்கள் பாதிப்பை ஏற்படுத்தி விரயத்தை பதிவு செய்துவிடுகின்றன என்று மலாயா பல்கலைக்கழகத்தை சேர்ந்த கோ லிம் தாய் கூறினார்.

கிட்டத்தட்ட 8 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான RON 95 எரிபொருளுக்கான மானியத்தில் 40% கிட்டத்தட்ட 15% பணக்காரர்களுக்கும் வெளிநாட்டவர்களுக்கும் பயனளிக்கிறது என்று அவர் சொன்னார்.

2023 ஆம் ஆண்டு வாக்கில் எரிபொருள் மானியம் ஆண்டுக்கு 50 பில்லியன் ரிங்கிட்டிற்கும் அதிகமாக உயர்வு கண்டது. இது சுகாதாரம், அடிப்படை வசதிகளுக்கான கட்டமைப்புக்கு ஒதுக்கப்பட்ட பட்ஜெட் ஒதுக்கீட்டையும் மிஞ்சிவிட்டது.

நிதி கசிவு, திறமையின்மை காரணமாக இழந்த நிதி, டிஜிட்டல் உள் கட்டமைப்பு அல்லது கல்வி போன்ற அதிக உற்பத்தித் துறைகளுக்கு திருப்பி விடப்பட்டுருக்கலாம். இது திறமையின்மை மட்டுமல்ல அநீதியும் கூட என்று கோ குறிப்பிட்டார்.

மற்றொரு மவுனமான செலவு ஒரு சார்புத் தன்மையாகும். மானியங்கள் நீண்ட காலம் பொதுவானதாக இருக்கும் போது, மக்கள் அதனை ஓர் உரிமையாகக் நினைக்கத் தொடங்கும் பட்சத்தில் சீர்திருத்தங்களை அமல்படுத்துவது மிகவும் கடினமாகிறது. சீர்திருத்தங்களுக்கான அரசியல் இடம் குறைகிறது.

மானிய ங்க‌ள் வழியிலான அதிகப்படியான பாதுகாப்பு நீண்ட காலத்திற்கு பொருளாதார வலிமையை குறைக்கும். இது ஒட்டு மொத்தமாக மலேசியாவின் போட்டித் திறனை குறைத்துவிடும் கோ சொன்னார்.

சரியான நேரத்தில் நடவடிக்கை எடுக்காவிட்டால், மலேசியா தனது நிதி இலக்குகளை இழக்கும் அபாயம் உள்ளது. இது முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பலவீனப்படுத்தும் என்று மெடலின் பெர்மா கூறினார்.

மானியங்களுக்கு இலக்கு வைப்பது பொருளாதாரம் பற்றியது மட்டும் அல்ல. இது நாட்டின் மீதான நம்பகத்தன்மை மேலும் நீண்டகால மீள்திறன் சம்பந்தப்பட்டது என்று அவர் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here