ஆயிர் கூனிங் இடைத்தேர்தல்: இரண்டு முதற்கட்ட வாக்குப்பதிவு மையங்கள் காலை 8 மணிக்கு திறக்கப்பட்டன

தாப்பா:

யிர் கூனிங் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு முதற்கட்ட வாக்களிப்பை எளிதாக்கும் வகையில் இரண்டு வாக்குப்பதிவு மையங்கள் இன்று காலை 8 மணிக்கு ஒரே நேரத்தில் திறக்கப்பட்டன.

பீடோரில் உள்ள பொது செயல்பாட்டுப் படை (GOF) 3வது பட்டாலியன் முகாமின் டேவான் ரெக்ரியாசி பெகவாய் கானன் மற்றும் தாப்பா மாவட்ட காவல் தலைமையகத்தின் (IPD) டேவான் அங்கெரிக் ஆகிய இடங்களில் குறித்த இரண்டு மையங்களும் அமைந்துள்ளன.

இந்த இடைத்தேர்தலுக்கான முதற்கட்ட வாக்களிப்பு செயல்பாட்டில் 500 காவல்துறையினர் மற்றும் அவர்களது துணைவியர் அடங்குவர்.

GOF வாக்களிப்பு மையம் மாலை 5 மணி வரை திறந்திருக்கும், அதே நேரத்தில் தாப்பா IPDயில் உள்ள மையம் நண்பகலில் மூடப்படும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

கடந்த பிப்ரவரி 22 அன்று குறித்த சட்டமன்ற உறுப்பினராக இருந்த இஷாம் ஷாருதீன் இறந்ததைத் தொடர்ந்து ஆயிர் கூனிங்கில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.

இந்த இடைத்தேர்தலில் பாரிசன் நேஷனல் (BN) வேட்பாளர் டாக்டர் முகமட் யூஸ்ரி பக்கீர், பெரிகாத்தான் நேஷனல் (PN) வேட்பாளர் அப்துல் முஹைமின் மாலேக்; மற்றும் பார்ட்டி சோசியலிஸ் மலேசியா (PSM) வேட்பாளர் பவானி கே.எஸ். ஆகியோரிடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here