உலகின் மிகச் சிறிய குழந்தை… வெறும் 350 கிராம் எடை

ஒரு குழந்தை பிறப்பதற்கு முன்பு 10 மாத காலம் தாயின் கருவறையில் இருக்கும். அந்த 10 மாதங்களில் குழந்தையின் உடல் உறுப்புகள், செயல் திறன் ஆகியவை வளர்ச்சி அடையும். அவ்வாறு முழுமையாக வளர்ச்சி அடையாமல் பிறக்கும் குழந்தைகள் குறை மாத குழந்தைகள் என அழைக்கப்படும்.

அவர்கள் மற்ற குழந்தைகளை விட சற்று குறைவான வளர்ச்சி மற்றும் செயலி திறன் கொண்டிருப்பர். அவ்வாறு 22 இரண்டு வாரங்களில் பிறந்த பெண் குழந்தை ஒன்று தற்போது நலமுடன் உள்ளது. அந்த குழந்தை எந்த வித பிரச்சனையும் இன்றி மற்ற குழந்தைகளை போலவே இயல்பாக இருப்பதால் அதை அதிசய குழந்தை என்கிறார்கள் மருத்துவர்கள்.

அமெரிக்காவின் கனெக்டிகட் மாகாணத்தில் உள்ள செயின்ட் பிரான்சிஸ் மருத்துவமனையில் விஷம் குடித்ததாக கூறி ஒரு கர்ப்பிணிப் பெண் அனுமதிக்கப்பட்டார். அவர் கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த நிலையில் அவருக்கு பிப்ரவரி 22ம் தேதி காலை பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தையின் எடை 12.4 அவுன்ஸ் அதாவது 350 கிராம் மட்டுமே. இதை கண்ட மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

ஏனென்றால், இவ்வளவு சிறிய குழந்தையை அவர்கள் அதுவரை பார்த்தது கூட இல்லை. அது உள்ளங்கையில் பொருந்தும் அளவுக்கு சிறியதாக இருந்தது. அதோடு அந்தக் குழந்தை பிறந்தபோது, ​​நிமோனியா நோயால் பாதிக்கப்பட்டிருந்தது. எனவே தாயும் குழந்தையும் ஆபத்தான நிலையில் இருந்தனர். இந்நிலையில் மருத்துவர்கள் உடனடியாக சிகிச்சையை தொடங்கினர்.

முதலில் காப்பாற்றுவது கடினமாக இருக்கலாம் என்று தோன்றினாலும், மருத்துவர்கள் நிலைமையைக் கவனித்து, குழந்தையை நன்றாகக் கவனித்துக் கொண்டனர். சுமார் 4 மாத சிகிச்சைக்கு பிறகு அந்தக் குழுந்தை தற்போது நலமுடன் உள்ளது.

இதையடுத்து அந்தக் குழந்தை கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தற்போது குழந்தையின் எடை 7.5 பவுண்டுகள் அதாவது 3.40 கிலோவாகிவிட்டது.

இந்நிலையில் சிகிச்சை முடிந்து குழந்தை வீட்டிற்கு செல்லும் போது, ​​மருத்துவமனை ஊழியர்கள் அனைவரும் கொண்டாடி மகிழ்ந்தனர். உயிருக்கு போரடிக் கொண்டிருந்த பச்சிளம் குழந்தை குணமடைந்து வீடு திரும்புவதை கண்ட மருத்துவர்கள் நெகிழ்ச்சி அடைந்தனர்.

மருத்துவர்களின் கூற்றுப்படி, அத்தகைய குழந்தை உயிர் பிழைப்பதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு. அவர்களின் முழு உடலும் வளர்ச்சியடையாத நிலையில் குழந்தைகளின் நிலை எப்போதுமே ஆபத்தானது தான்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here