வீடமைப்பு ஊராட்சித்துறை அமைச்சின் பாராட்டு விழா 411 பேருக்கு நனிசிறந்த சேவை விருது .

புத்ராஜெயா,

வீடமைப்பு ஊராட்சித்துறை அமைச்சு நேற்று 2024 பாராட்டு நிகழ்ச்சியில் 411 பேருக்கு நனிசிறந்த சேவை விருதை (APC) விருது வழங்கி கௌரவித்தது. புத்ராஜெயா அனைத்துலக மாநாட்டு மையத்தில் உள்ள டேவான் பெர்டானாவில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு வீடமைப்பு ஊராட்சித்துறை அமைச்சர் ஙா கோர் மிங் தலைமையேற்றார். அதேசமயம் அமைச்சின் உயர்நிலை அதிகாரிகள் இதில் கலந்துகொண்டனர்.

2024ஆம் ஆண்டு முழுவதும் மிகச்சிறந்த முறையில் சேவைகள் ஆற்றியவர்களை கௌரவிக்கும் வகையில் வீடமைப்பு ஊராட்சித்துறை அமைச்சு 2024 நனிசிறந்த பாராட்டு நிகழ்ச்சியை நடத்தியது. இதில்” அமைச்சின் பல்வேறு பிரிவுகளைச்” சேர்ந்தவர்களுக்கு இவ்விருதுகள் வழங்கப்பட்டன.

கூட்டுப் பணியை உற்சாகப்படுத்தும் வகையில் அவர்களுக்கு தன்முனைப்பு தருவதாகவும் பாராட்டி பெருமைப்படுத்தும் கலாச்சாரத்தையும் விதைக்கும் வண்ணம் இந்த நிகழ்ச்சி பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டது. அமைச்சை சேர்ந்த 106 பேருக்கும் எஸ்.டபிள்யூ.கார்ப் எனப்படும் திடக்கழிவுப் பொருள், பொதுத் தூய்மை மேலாண்மைப் பிரிவைச் சேர்ந்த 88 பேருக்கும் தீயைைணப்பு மீட்பு இலாகாவைச் சேர்ந்த 84 பேருக்ககும் இந்த நனி சிறந்த சேவை விருதை ஙா கோர் மிங் வழங்கினார்.

அதேசமயத்தில் ஊராட்சித்துறை, தேசிய இயற்கை வனப்பு இலாகா, தேசிய திடக்கழிவு மேலாண்மை இலாகா, நகர், புறநகர் மேம்பாட்டு இலாகா, வீடமைப்பு தீர்ப்பாயத்துறை, வீடமைப்பு, ஊராட்சி பயிற்சிக்கழகம் ஆகியவற்றை சேர்ந்த அதிகாரிகளுக்கும் இந்த விருது வழங்கப்பட்டது.

APC விருது என்பது ஒரு தனிநபரின் உயர்ந்த சேவைக்கு அங்கீகாரம் அளிப்பது மட்டுமன்றி அமைச்சின் ஒட்டுமொத்த பணியாளர்களின் கடப்பாடுகளுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அமைகிறது. மக்களுக்கு இந்த நனி சிறந்த சேவைகளை வழங்கியதற்காக இந்த பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படுகிறது என்று அமைச்சர் தெரிவித்தார்.

 அர்ப்பணிப்பு, உயர்நெறி, நிபுணத்துவம் ஆகியவற்றின் அடிப்படையில் மிகச்சிறந்த சேவைகளை ஆற்றி தங்களுடைய சகாக்களுக்கும் ஒரு சிறந்த முன்னுதாரணமாக இவர்கள் திகழ்கின்றனர். இதுபோன்ற பாராட்டுகள், விருதுகள் சேவைத்தரத்தை இன்னும் உச்சத்திற்கு கொண்டு செல்வதற்கு ஓர் ஊக்குவிப்பாக இருக்கும் என்பதை சுட்டிக்காட்டிய ஙா கோர் மிங் மக்களின் நல்வாழ்வுக்காக தரமிக்க பொதுச்சேவைகளை வழங்க வேண்டும் என்ற மலேசிய மடானி அரசாங்கத்தின் இலக்கிற்கும் நோக்கத்திற்கும் ஏற்ப அமைச்சின் பணியாளர்கள், அதிகாரிகள் இன்னும் ஆக்கப்பூர்வமான முறையில் சேவைகளை மேம்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here