மலேசியாவின் பல மாநிலங்களுக்கு இடியுடன் கூடிய மழை, கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

கோலாலம்பூர்:

இன்று மாலை 4 மணி வரை நாட்டின் பல மாநிலங்களுக்கு இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த மழை பெய்யக்கூடும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் (METMalaysia) எச்சரிக்கையை விடுத்துள்ளது.

இன்று மதியம் 12.30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை, பெர்லிஸ், பினாங்கு மற்றும் கெடாவில் குறிப்பாக லங்காவி, யான், கோலா மூடா, பாலிங், கூலிம் மற்றும் பண்டார் பஹாரு ஆகிய பகுதிகளை உள்ளடக்கியது.

பேராக்கில், பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் கெரியான், லாரூட், மாடாங் மற்றும் செலாமா, மேற்கு பேராக், மஞ்சுங், மத்திய பேராக், பாகன் டத்தோ மற்றும் லோயர் பேராக் ஆகியவை அடங்கும்.

கிளந்தான் (பாசிர் மாஸ், ஜெலி, தானாஹ் மேரா, மச்சாங், பாசிர் பூத்தே மற்றும் கோலாக்கிராய்) மற்றும் திரெங்கானு (பெசூட் மற்றும் செத்தியூ) ஆகிய இடங்களுக்கும் இந்த எச்சரிக்கைகள் விடப்பட்டன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here