கெரிக்-ஜெலி நெடுஞ்சாலையில் காரை நாசமாக்கிய யானைகள்; ஹார்ன் சத்தம் காரணமாக இருக்கலாம் என நம்பப்படுகிறது

கெரிக்:

கெரிக்-ஜெலி கிழக்கு-மேற்கு நெடுஞ்சாலையில் நேற்று இரவு யானைகள் காரை சேதப்படுத்தியதற்கு, ஹாரன் சத்தம் காரணமாக இருக்கலாம் என்று போலீசார் நம்புகின்றனர்.

நெடுஞ்சாலையின் KM11 இல் நடந்த சம்பவம் குறித்து, சேதமடைந்த வாகனத்தின் உரிமையாளரான 39 வயது நபர் புகாரளித்தார் என்று, மாவட்ட காவல்துறைத் தலைவர் கண்காணிப்பாளர் சுல்கிஃப்லி மஹ்மூட் கூறினார்.

இரவு சுமார் 8.15 மணியளவில் ஜெலியில் இருந்து ஜெரிக் நோக்கி டொயோட்டா வியோஸில் பயணித்த ஓட்டுநர், சாலையைக் கடக்கும் யானைக் கூட்டத்தை எதிர்கொண்டபோது இந்த சம்பவம் நிகழ்ந்தது என்றார்.

A car damaged by wild elephants is seen on the Jeli-Gerik highway. — Facebook pic

யானைகளைக் கவனித்ததும் ஓட்டுநர் தனது வாகனத்தை நிறுத்திவிட்டு, முகப்பு விளக்குகளை அணைத்ததாக சுல்கிஃப்லி கூறினார்.

யானைகள் சாலையை கடக்கட்டும் என ஓட்டுநர் காத்திருந்தபோது, ​​பின்னால் வந்த ஒரு வாகனம் அதன் ஹார்னை ஒலித்தது, இது யானைகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கலாம்.

“பின்னர் மூன்று யானைகள் காரை நெருங்கி வந்ததாகவும், இதனால் ஓட்டுநர் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள பீதியுடன் வாகனத்தை விட்டு இறங்கி ஓடியதாகவும்,” அவர் இன்று வெளியொ ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

காரின் முன், பின் மற்றும் இருபுறமும் குறிப்பிடத்தக்க சேதம் ஏற்பட்டாலும், ஓட்டுநர் காயமடையவில்லை என்று சுல்கிஃப்லி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here