2025/2026 மெட்ரிகுலேஷன் கல்விக்கான விண்ணப்ப முடிவுகளை மாணவர்கள் இன்று முதல் இணையத்தில் பார்க்கலாம்

கோலாலம்பூர்:

2025/26 கல்வியாண்டிற்கான மெட்ரிகுலேஷன் திட்டத்திற்கு தகுதி பெற்ற விண்ணப்பதாரர்கள் தங்கள் முடிவுகளை இன்று புதன்கிழமை (மே 21) காலை 10 மணி முதல் இணையத்தில் சரிபார்க்கலாம்.

2024ஆம் ஆண்டு எஸ்.பி.எம். பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் முறையாக தங்களின் மெட்ரிகுலேஷன் விண்ணப்ப முடிவுகளை MATRIKULASI.MOE.GOV.MY எனும் அகப்பக்கம் வாயிலாக தெரிந்து கொள்ளலாம்.

மேலும், மெட்ரிகுலேஷன் பதிவு நாளை மே 22ஆம் தேதி முதல் ஜூன் 21ஆம் தேதி வரை மாணவர்கள் மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மெட்ரிகுலேஷன் கல்வி பயில்வதற்கான உறுதிப்படுத்தல் கடிதம் கிடைத்தவுடன் மாணவர்கள் சுயமாக வந்து மெட்ரிகுலேஷன் கல்லூரிகளில் பதிந்து கொள்ளலாம் என்றும் கூறப்படுகிறது.

அதே நேரம் மெட்ரிகுலேஷன் கல்விக்கான இடம் கிடைக்காத மாணவர்கள் மேல்முறையீடு செய்யலாம். குறித்த மேல்முறையீட்டை செய்ய விரும்பும் மாணவர்களுக்கு ஜூன் 21ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here