மான்செஸ்டர் யுனைடெட்டின் அதிகாரபூர்வ விமானப் பங்காளியாகும் மலேசிய ஏர்லைன்ஸ்

கோலாலம்பூர்:

ங்கிலி‌ஷ் பிரிமியர் லீக் காற்பந்துக் குழுவான மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்து கிளப்பின் (MUFC) அதிகாரபூர்வ வர்த்தக விமானப் பங்காளி நிறுவனமாக மலேசிய ஏர்லைன்ஸ் (MAS) இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்து கிளப்பிற்கு பல பில்லியன் ரசிகர்கள் உள்ளார்கள் , இதனைச் சாதகமாக்கிக்கொள்ளவும், அதன் விமானச் சேவையை உலகளாவிய ரீதியை மேம்படுத்துவதற்குமான ஒரு நடவடிக்கையாக மலேசிய ஏர்லைன்ஸ் (MAS) இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

இந்த உடன்படிக்கை மூலம் மலேசிய ஏர்லைன்ஸ் மற்றும் மான்செஸ்டர் யுனைடெட் ஆகிய இரண்டு உலகளாவிய அமைப்புக்களை ஒன்றிணைப்பதாக மலேசிய ஏவியேஷன் குழுமத்தின் (MAG) நிர்வாக இயக்குநர் இஷாம் இஸ்மாயில் அறிவிப்பை வெளியிடும் நிகழ்வில் கூறினார்.

இந்த ஏற்பாடு, யுனைடெட்டின் ரசிகர்களுக்கும் மலேசிய ஏர்லைன்சின் வாடிக்கையாளர்களுக்கும் மறக்க முடியாத அனுபவங்களை வழங்கும் என்றும் அவர் சொன்னார்.

இந்நிலையில், இங்கிலீஷ் பிரீமியர் லீக் கிளப் அதன் கூட்டாளிகளின் குடும்பத்திற்கு MAS ஐ வரவேற்பதில் மகிழ்ச்சி அடைவதாகவும், விமான நிறுவனத்தின் நம்பகமான, வரவேற்கத்தக்க மற்றும் விருந்தோம்பும் சேவையை தங்களின் உலகளாவிய ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்வதற்கு ஆவலுடன் இருப்பதாகவும் யுனைடெட்டின் பங்காளித்துவ விவகாரப் பிரிவின் தலைமை நிர்வாக அதிகாரியான விக்டோரியா டிம்ப்சன் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here