ஹஜ்ஜுப் பெருநாள்: பலியிடுதல் சடங்கிற்கு கால்நடை விநியோகம் போதுமானதாக இருக்கும்

புத்ரஜெயா:

டிலாதா பண்டிகை எனப்படும் ஹஜ்ஜுப் பெருநாள் பண்டிகையின் போது ”ibadah korban” (பலியிடல் சடங்குகள்) க்கு மொத்தம் 38,804 பசுக்கள் மற்றும் எருமைகள், 30,167 ஆடுகள் மற்றும் செம்மறி ஆடுகள் இருப்பதாக வேளாண்மை மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பலியிடும் சடங்குகளுக்காக 34,451 பசுக்கள் மற்றும் எருமைகள் மற்றும் 22,453 ஆடுகள் மற்றும் செம்மறி ஆடுகள் இருப்பதாகவும், மலேசியா முழுவதும் இந்த ஆண்டு ஐடிலாதா கொண்டாட்டத்திற்கான கால்நடை விநியோகத் தேவையை பூர்த்தி செய்ய, இவை போதுமானதாக இருக்கும் என்று அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கால்நடை சேவைகள் துறையின் (DVS) கடந்த மார்ச் மாத புள்ளிவிவரங்களின் அடிப்படையில், பசுக்கள் மற்றும் எருமைகளின் உள்ளூர் விநியோகம் 35,581 ஆக உள்ளது, கூடுதலாக 3,223 இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

அதேநேரம் ஆடுகள் மற்றும் செம்மறி ஆடுகளின் உள்ளூர் இருப்பு 26,845 ஆகும், இதில் 3,322 இறக்குமதி செய்யப்பட்டன” என்று அமைச்சகம் மேலும் கூறியது.

இந்த சனிக்கிழமை ஐடிலாதா கொண்டாட்டத்தின் போது பலியிடுவதற்காக, தீபகற்ப மலேசியா முழுவதும் 40 தனியார் இறைச்சி கூடங்களுக்கு DVS உரிமங்களை வழங்கியுள்ளதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here