புத்ராஜெயா:
வாவாசான் பாலத்திலிருந்து குதித்து ஆடவர் ஒருவர் நேற்று தற்கொலை செய்துக்கொண்டதாகக் கூறப்படுகிறது.
புத்ராஜெயாவின் பெர்சியாரான் 2 இல் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாகவும், இது தொடர்பாக தங்கள் தரப்புக்கு அவசர அழைப்பு கிடைத்ததாக தீயணைப்பு படையின் நடவடிக்கை பிரிவு கோமாண்டர் கிரேல் அஸ்மான் தெரிவித்தார்.
தகவல் கிடைத்ததும் சுமார் 12 தீயணைப்பு மற்றும் மீட்புப்படையினர் அந்த இடத்திற்கு விரைந்ததாகவும் அவர் சொன்னார்.
அதிகாலை 2.23 மணியளவில் சடலத்தை மீட்புப்படையினர் கண்டெடுத்தனர் என்று அவர் மேலும் தெரிவித்தார்.





















