கோலாலம்பூர்:
மானிய விலையிலான LPG சமையல் எரிவாயு சிலிண்டர்களை கடத்திய குற்றச்சாட்டில் ஒரு வெளிநாட்டவர் உட்பட மொத்தம் 4 ஆடவர்கள் மீது இன்று குற்றம் சாட்டப்பட்டது.
இதில் குறித்த நால்வரும் தங்களுக்கு எதிரான குற்றத்தை ஒப்புக் கொண்டனர்.
கடத்ந கடந்த மே 30, மாலை 6.45 மணிக்கு , ஜாலான் மந்தின் பகுதியில் உள்ள பொருள் கிடங்கில் போலீசார் மேற்கொண்ட சோதனையில் 1,200 கிலோ எடையிலான LPG சமையல் எரிவாயு சிலிண்டர்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
அதே நேரம் அந்த சேமிப்பு கிடங்கில் மறைந்திருந்த 57 வயது லீ கின் சோங், 38 வயது லிம் சுன் வீ, 28 வயது தான் கை லுன், 31 வயது மார் தாங் ஆகிய நால்வரும் கைது செய்யப்பட்டனர்.
இதில் மார் தாங் எனும் வெளிநாட்டவர் UNHCR அடையாள அட்டை கொண்டிருக்கு அகதி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வழக்கில் சம்மந்தப்பட நால்வரில் உள்ளூர் ஆடவர்கள் மூவருக்குத் தலா RM6,000 ஜாமினும், UNHCR அடையாள அட்டை கொண்டிருக்கும் அகதிக்கு RM8,000 ஜாமினும் வழங்கியதுடன், வரும் ஜூன் 5 ஆம் திகது வழக்கு மீண்டும் செவிமடுக்கப்படும் என்றும் நீதிமன்றம் அறிவித்தது.





















