கேமரன் ஹைலேண்ட்ஸில் சாலையோர கடைகளை முட்டிமோதிய கார்; 3 சிறுவர்கள் உட்பட நால்வர் காயம்

கோலாலம்பூர்:

கேமரன் ஹைலேண்ட்ஸில் உள்ள கியா ஃபாமில் இன்று கட்டுப்பாட்டை இழந்த கார் மோதியதில் 24 வயது இளைஞன் மற்றும் 10, 8 மற்றும் 3 வயதுடைய மூன்று சிறுவர்கள் லேசான காயமடைந்தனர்.

சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் CCTV காட்சிகளின்படி, சிவப்பு நிற பெரோடுவா மைவி கார் சாலையின் இடதுபுறத்தில் இருந்த பல கடைக்காரர்களை மோதியது.

இவ்விபத்துக்குள்ளான கார் ஓட்டுநருக்கு வலிப்பு ஏற்பட்டது ஆரம்பகட்ட விசாரணையில் கண்டறியப்பட்டது, என்று பகாங் காவல்துறைத் தலைவர் டத்தோஸ்ரீ யஹாயா ஓத்மான் கூறினார்.

இந்த விபத்தில் காயமடைந்த 24 வயது நபர் சாலையில் வீசப்பட்டார், அதே நேரத்தில் மூன்று குழந்தைகளும் காரின் கீழ் மாட்டிக்கொண்டனர். பாதிக்கப்பட்ட அனைவரும் சிகிச்சைக்காக கேமரன் ஹைலேண்ட்ஸில் உள்ள சுல்தானா ஹஜ்ஜா கல்சம் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாக யஹாயா கூறினார்.

சம்பவம் குறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருவதாக அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here