குவாந்தான்:
நேற்று சனிக்கிழமை நடந்த ஒரு சம்பவத்தில், மியன்மார் நாட்டுப் பெண் ஒருவர், மொபைல் போன் விற்பனையாளரை கத்தியால் காயப்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.
தாமான் இம்பியன்குவின் குவாந்தானில், நேற்று பிற்பகல் 3.40 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தில், UNHCR அட்டையை வைத்திருந்த 39 வயது மியன்மார் பெண் ஒருவர், ரேஸர் கத்தியைப் பயன்படுத்தி வெட்டியதில், 47 வயதான ஆண் விற்பனையாளருக்கு கழுத்து மற்றும் காலில் வெட்டுக்களுடன் சிறிய காயங்கள் ஏற்பட்டன என்று, குவாந்தான் மாவட்ட காவல்துறைத் தலைவர், உதவி ஆணையர் வான் முகமது ஜஹாரி வான் புசு கூறினார்.
கைப்பேசியில் ஏற்பட்டுள்ள கோளாறுகள் தொடர்பாகக் கைப்பேசிக் கடையின் உரிமையாளருடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டதாகவும் வாக்குவாதத்தில் பொறுமை இழந்து கத்தியால் தாக்கியதாகவும் தெரிய வந்துள்ளது.




















