பிரபல நடிகை காவ்யா மாதவனின் தந்தை காலமானார்

சென்னை,மலையாள பட உலகில் ‘நம்பர் 1’ கதாநாயகியாக வலம் வந்த நடிகை காவ்யா மாதவன். இவர் தமிழில், ”காசி”, ”என்மன வானில்”, ”சாது மிரண்டா” உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமானார்.

இந்நிலையில், இவரது தந்தை பி மாதவன் உடல்நல குறைவு காரணமாக நேற்று சென்னையில் காலமானார். இவரது வயது 75. கேரளாவில் காசர்கோடு பகுதியில் உள்ள நீலேஸ்வரம்தான் இவரது சொந்த ஊர்.

இவரது உடல் சென்னையிலிருந்து இறுதிச் சடங்குகளுக்காக அவரது சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. மலையாளத் திரையுலகைச் சேர்ந்த பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here