போலி ஆவணங்கள் வழி சொக்சோ நிதி கோரிக்கை: தொழிலதிபர் மற்றும் நண்பருக்கு வெ.3 லட்சம் அபராதம்!

கோலாலம்பூர் 

SOSCO வை ஏமாற்றியதாக குற்றம் சுமத்தப்பட்ட தொழிலதிபர் ஒருவர், இன்று கோலாலம்பூர் நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து, RM300,000 அபராதம் விதிக்கப்பட்டது.

52 வயதான பி. சத்தியசீலன், Global Education Network Sdn Bhd (GENSB) நிறுவனத்தின் உரிமையாளர். இவர் Penjana Kerjaya 1.0 மற்றும் 2.0 திட்டங்களின் கீழ், 2020 மற்றும் 2021-இல் நடை பெறாத பயிற்சி நிகழ்ச்சிக்காக போலி ஆவணங்களை சமர்ப்பித்து SOSCO வை ஏமாற்றியதாக வழக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SOSCO அலுவலகம், புத்ராஜாயா பகுதியில், 2020 டிசம்பர் 23 முதல் 2021 ஆகஸ்ட் 12 வரையிலான காலப்பகுதியில் தவறான பயிற்சிக் குறும்பட்டியல்கள் மற்றும் கையொப்பங்கள் கொண்ட ஆவணங்களை சமர்ப்பித்து சத்தியசீலன் சுமார் RM496,000 நிதியை பெற்றார் என தெரிவிக்கப்பட்டது.

இந்த குற்றச்சாட்டுகள், மலேசிய குற்றச் சட்டத்தினுடைய பிரிவு 417 இன் கீழ் தொடரப்பட்டுள்ளன. குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் 5 ஆண்டுகள் சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

இதே வழக்கில், அவரின் கூட்டாளி ஆர். நந்தகோபால் (43) குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து, அவருக்கும் ரூ.300,000 அபராதம் அல்லது அபராதம் செலுத்தத் தவறினால் 10 மாதங்கள் சிறைதண்டனை விதிக்கப்பட்டது.

இருவரையும் வழக்கறிஞர் ஆர். பாபு நாயுடு பிரதிநிதித்துவப்படுத்த, அரசு தரப்பு வழக்கறிஞராக நூர் சயஸ்வானி சோப்ரி பங்கேற்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here