MARDI விரைவில் மூன்று புதிய டுரியான் வகைகளை அறிமுகப்படுத்துகிறது

கோலா கங்சார்,

மலேசிய வேளாண்மை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (MARDI) தொடர்ந்து நடக்கும் ஆராய்ச்சியின் ஒரு பகுதியாக, இரண்டாண்டுகளுக்குள் மூன்று புதிய டுரியான்ன் வகைகளை அறிமுகப்படுத்தவுள்ளது.

“தற்போது பல வலுவான ஹைபிரிட் துரியன் வகைகளை மதிப்பீடு செய்து வருகின்றோம். இவை எதிர்காலத்தில் புதிய கிளோன்களாக உருவாகும் வாய்ப்புகள் உள்ளன,” என்கிறார் MARDI இயக்குநர் ஜனரல் டத்தோ டாக்டர் மொஹமட் ஸபாவி அப்துல் கானி.

“இந்த வகைகள் மலேசியாவின் பல்வேறு நிலத்தரத்திற்கு ஏற்றதாக உள்ளதா என்பதை மதிப்பீடு செய்கிறோம். குவாலா கங்க்சார் MARDI மையம் மட்டுமன்றி, திரெங்கானுவில் உள்ள ஜெராங்காவிலும் இந்த ஹைபிரிட் வகைகள் உருவாக்கப்படுகின்றன.” என அவர் மேலும் தெரிவித்தார்.

தற்போது இந்த புதிய வகைகளுக்கான பெயர்களும் குறியீடுகளும் இறுதி நிலையில் உள்ளதாகவும், உத்தியோகபூர்வ வெளியீட்டில் அவை அறிவிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, தற்போது ‘MARDI Super 88’ என அழைக்கப்படும் டுரியான் வகை MS88, வருங்கால சந்தை ஆக்கிரமிப்பை குறிவைத்து, புதிய மற்றும் ஈர்க்கக்கூடிய பெயருடன் மீள் பிராண்டிங் செய்யப்பட உள்ளது.

முழுமையான MARDI மேற்பார்வையில், நாடுமுழுவதும் 13,000 MS88 டுரியான் மரங்கள் ஏற்கனவே நட்டுவைக்கப்பட்டுள்ளன.

“சில மரங்கள் தற்போது 2-3 ஆண்டுகள் வளர்ந்துள்ளன. மேலும் 5-6 ஆண்டுகளில் இவை வர்த்தக ரீதியாக முழுமையாக அறுவடைக்குத் தயாராகும்,” எனவும் அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here