கோலாலம்பூர்:
18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மலேசியர்களுக்காக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்திருந்த RM100 “Bantuan Sara” உதவித்தொகையை முன்விண்ணப்பம் இல்லாமல் நேரடியாக வழங்கப்படும் என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
சமீபத்தில் சமூக ஊடகங்களில் பரவியுள்ள “Bantuan Sara”க்கு முன்னறிவிப்பு பதிவு தேவை எனும் தகவல் பொய்யானது என்று அமைச்சு உறுதியாக விளக்கமளித்துள்ளது.
இந்த உதவித்தொகை, MyKad அடிப்படையில் தானாகவே சம்பந்தப்பட்டவர்களின் கணக்கில் சேர்க்கப்படும். இதற்கான தனியான விண்ணப்பம் தேவையில்லை எனவும், இணையத்தில் பரவும் தவறான தகவல்களுக்கு மக்கள் எளிதில் நம்பி ஏமாறக்கூடாது எனவும் அமைச்சு எச்சரித்துள்ளது.
மோசடிகளில் சிக்காமல், தங்களை பாதுகாத்துக் கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்திய நிதி அமைச்சு, சரியான தகவல்களுக்கு தங்கள் அதிகாரப்பூர்வ தளங்களை நாடுமாறு கேட்டுக்கொண்டுள்ளது.





















