13வது மலேசியா திட்டம் – இந்திய பெண்கள் தொழில்முனைவோருக்கான மகிழ்ச்சியான செய்தியே! : MAICCI மகளிர் பிரிவு

கோலாலம்பூர்,

13வது மலேசியா திட்டம் (13MP) இந்தியப் பெண்களுக்கு வணிக துறையில் நேரடி வாய்ப்புகளை வழங்கி, அவர்களது தனிநிலையையும் திறமைகளையும் முன்னிறுத்தும் திட்டமாக அமைந்துள்ளதாக மலேசிய இந்திய வணிகவாரியங்கள் கூட்டமைப்பின் (MAICCI) மகளிர் பிரிவு தலைவர் ஹேமலா சிவம் தெரிவித்தார்.

“13MP என்பது வெறும் ஆவணத் திட்டமல்ல; இது மடானி அரசாங்கத்தின் உறுதியான அறிவிப்பாகும் – எத்தனையோ ஆண்டுகளாக புறக்கணிக்கப்பட்ட இந்திய பெண்கள் இப்போது தேசிய முன்னேற்றத்தின் உள்வாங்கப்படுகிறார்கள்,” என்று அவர் கூறினார்.

இந்த திட்டத்தின் மூலம் கல்வி, தொழில்நுட்ப மற்றும் தொழில்திறன் பயிற்சி (TVET), STEM கல்வி மற்றும் சிறு மற்றும் வீட்டு தொழில்களுக்கு ஆதரவுகள் அதிகரிக்கப்படுவதாகவும் குறிப்பிட்டார். குறிப்பாக B40 வருமானக்குழுவைச் சேர்ந்த இந்தியப் பெண்களுக்கு இது ஒரு முக்கிய முன்னேற்றமாகும் என்றார்.

மேலும், இந்திய சமூக தொழில்முனைவோர் மேம்பாட்டு திட்டம் (SPUMI) மற்றும் சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டு திட்டம் (PPSMI) ஆகியவை, தொடர்ந்து வலுப்படுத்தப்படுவதால், இது நிலையான முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் என்று அவர் தெரிவித்தார்.

“இவை உதவித் தொகைகள் அல்ல; அமைப்புசார்ந்த ஆதரவு. அரசாங்கம் வறுமை நிலைப் பெண்களின் வணிக வளர்ச்சியையும் உருவாக்க விரும்புகிறது – இது வாழ்க்கைமட்டுமல்ல, ஒரு பாரம்பரியம்,” என்று ஹேமலா கூறினார்.

இத்திட்டம் முழுமையாக மக்கள் சென்றடைய MITRA, KUSKOP மற்றும் குடிமக்கள் அமைப்புகள் இணைந்து செயல்பட வேண்டும் என்றும், அனைத்து இந்திய பெண்களும் தயாராக உள்ளனர்; ஆனால் அவர்களுக்கு அணுகல், திறமை மற்றும் வாய்ப்பு தேவை என்பதையும் ஹேமலா வலியுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here