மிரியில் 44 வயது ஆண் காணாமற்போன சம்பவம்: இரண்டாவது நாளாக மீட்புப் பணிகள் தொடர்கின்றன

மிரி

கடந்த வெள்ளிக்கிழமை மிரி பஸ் நிலையம் அருகே உள்ள காட்டுபகுதியில் 44 வயது உதில் லூத்தான் என்ற நபர் காணாமற்போன சம்பவம் தொடர்பாக, இன்றும் (ஞாயிறு) இரண்டாவது நாளாக தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

“வெள்ளிக்கிழமை இரவு 8.30 மணி அளவில் அவர் ஒரு குடும்பத்தினரை அழைத்துப் பேசியுள்ளார். அவர் தன்னை குறிப்பிட்ட இடத்தில் வந்து கூட்டிச்செல்லுமாறு கூறியிருந்தார். ஆனால், அந்த இடத்திற்கு குடும்பத்தினர் வந்தபோது, அவர் அங்க இருக்கவில்லை என நாம் அறிகிறோம் என மிரி போலீஸ் தலைவர் ஏசிபி மொக்தார் பாஹ்ரான் கூறினார்.

சனிக்கிழமை அளிக்கப்பட்ட காணாமற்போன புகாரின் அடிப்படையில், போலீசார், தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினர், பாதுகாப்புப் படையினர் மற்றும் உதிலின் குடும்பத்தினர் இணைந்து தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சனிக்கிழமை நடைபெற்ற தேடுதல் பணிகள் வெற்றியளிக்காத நிலையில், மாலை நிறுத்தப்பட்டு, இன்று காலை 8 மணிக்கு மீண்டும் தொடங்கியதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

உதில் லூத்தானை பற்றிய தகவல்கள் தெரிந்தவர்கள், சார்ஜென்ட் ஹெல்மி யூசொப்பை 085-433222 அல்லது 013-5656646 என்ற எண்களில் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here