சைபர்ஜெயா,
மலேசியா தற்போதைய ASEAN இன் தலைமைத்துவ நாடாக செயல்படும் நிலையில், இந்த ஆண்டின் தலைமை பதவியின் கீழ் ASEAN குழுமம் பல முக்கிய பிராந்தியச் சிக்கல்களில் சரியான மற்றும் சாதுர்யமான நடவடிக்கைகளை எடுத்துள்ளது என வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் ஹசன் தெரிவித்தார்.
“மலேசியாவின் தலைமையின்போது, ASEAN தனது உறுதிப்பாட்டையும், செயல் திறனையும் நிரூபித்துள்ளது. பிராந்தியத்தில் நிலவும் அரசியல் மற்றும் மனித உரிமை சவால்கள் மீது தீர்வாக அணுகும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன,” என சைபர்ஜெயாவில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், மலேசியா, ASEAN உறுப்பினர்களிடையே ஒற்றுமையை வலுப்படுத்தும் நோக்கத்துடன் செயல்படுவதோடு மட்டுமல்லாமல், டாய்லந்து, கம்போடியா மட்டுமல்லாமல், மியான்மார் உட்பட பல பிராந்தியமான முக்கிய பிரச்சனைகளில் நியாயமான மற்றும் மனிதநேய அடிப்படையில் தீர்வுகளை முன்வைத்துள்ளதாகத் தெரிவித்தார்.
ASEAN குழுமம் தற்போது நீப்போதும் இல்லாதவாறு பாதுகாப்பு, பொருளாதாரம், மனித உரிமைகள் மற்றும் வியாபார ஒத்துழைப்பு உள்ளிட்ட துறைகளில் முன்னேற்றத்தையும், புதிய செயல்திட்டங்களையும் முன்னெடுத்து வருகிறது என்கிறார் அவர் .





















