கோலாலம்பூர்:
ஈப்போ, செமோர் (Chemor) பகுதியில் உள்ள கோயில் ஒன்றுக்கு அருகில், நேற்று அதிகாலை 6 மணியளவில், அடையாளம் தெரியாத ஒருவர், ரயில் மோதி உயிரிழந்தார்.
அதிகாலை, இருட்டாகவும், மூடுபனியுடனும் இருந்ததால், ரயில் ஓட்டுநருக்கு எதுவும் தெளிவாகத் தெரியவில்லை. இருப்பினும், ரயில் பாதையில் ஒரு பெரிய இரும்பு சத்தம் கேட்டதாகக் கூறியுள்ளார்.
பின்னர், காவல்துறையினர் நடத்திய தேடுதலில், ரயில் பாதையில் மனித உடல் துண்டுகளும், ஒரு சில பொருட்களும் கண்டெடுக்கப்பட்டன. அந்த உடல் பாகங்கள், ராஜா பெர்மைசூரி பைனோன் மருத்துவமனைக்கு (Raja Permaisuri Bainun Hospital) பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இந்தச் சம்பவத்தில், எந்தவொரு குற்றமும் நடக்கவில்லை என்று ஈப்போ காவல்துறைத் தலைவர் ஏசிபி அபாங் சைனல் அபிடின் (ACP Abang Zainal Abidin) கூறினார்.
எனவேதான் தற்போது, இந்த வழக்கு, திடீர் மரணமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. காணாமல் போன நபர்களின் குடும்பத்தினர், உடலை அடையாளம் காண முன்வருமாறு காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.





















