சைபர் செக்யூரிட்டி மலேசியா முதல் வாகன தடயவியல் ஆய்வகத்தை உருவாக்கியுள்ளது: கோபிந்த் சிங்

இலக்கவியல் அமைச்சின் கீழ் இயங்கும் சைபர் செக்யூரிட்டி மலேசியா, இன்று மலேசியாவில் முதல் வாகன தடயவியல் ஆய்வகத்தைத் தொடங்கியது. இந்த அதிகாரப்பூர்வ துவக்க நிகழ்வை, இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தொடக்கி வைத்தார்.

நாட்டின் இலக்கவியல் தொழில்நுட்பத்தின் வழி, தடயவியல் திறன்களை வலுப்படுத்தும் இந்த முயற்சி, ஒரு முக்கியமான மைல்கல் ஆகும். இது, இன்றைய நவீன வாகனங்களின்போக்குவரத்துக்கான வழிமுறையாக மட்டுமல்லாமல், இயந்திர செயல்திறன், ஓட்டுநர் முறைகள், GPS நிலைப்பாடு, கேமரா பதிவுகள் மற்றும் இன்ஃபோடெயின்மென்ட் அமைப்புகள் உள்ளிட்ட இலக்கவியல் தரவுகளின் மையமாகவும் செயல்படுகிறது.

­

இந்தத் தரவு வாகனத் தொழில் ஆராய்ச்சி, விபத்து தொடர்பான விசாரணைகளுக்கு, இலக்கவியல் சான்றுகள், குற்றவியல் வழக்குகள் மற்றும் பொதுப் பாதுகாப்புக்குக் கூட அவசியமான ஒன்றாகும். இலக்கவியல் அமைச்சின் நிறுவனம்,மிரோஸ், ஜெ.பி.ஜெ, காவல் துறை என குறிப்பிட்ட அரசு துறைகளோடு இணைந்து இது செயல்படும். வாகன தடயவியல் ஆய்வகத்தின் செயல்பாடுகள் கீழ்க்கண்டவாறு:

விபத்துக்கள் மற்றும் பாதுகாப்பு பிரச்சினைகள் தொடர்பான வாகனத் தரவுகளை ஆராய்ச்சி செய்து பகுப்பாய்வு செய்தல்

உண்மையான மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட டிஜிட்டல் சான்றுகள் வழி, சட்ட அமலாக்க நிறுவனங்களின் டிஜிட்டல் தடயவியல் விசாரணைகளை வலுப்படுத்துதல்

சட்ட நோக்கங்களுக்காக வாகனத் தரவு பகுப்பாய்வுடன் தொழில்நுட்ப ஆதரவை வழங்குதல்
தெற்கிழக்காசிய மற்றும் சர்வதேச ஒத்துழைப்பை வலுப்படுத்துவதோடு, மலேசியாவை வாகன டிஜிட்டல் தடயவியலில் மைய நாடாக மேம்படுத்துதல்

 

சாலை விபத்துகளுக்குமட்டும் அல்லாமல், கடத்தல், மனித கடத்தல் மற்றும் வாகன கூறுகளைப் பயன்படுத்தும் எல்லை தாண்டிய குற்றங்களை கையாளும் அதிகாரிகளின் குற்றவியல் விசாரணைகளின் கூறுகளை வலுப்படுத்த இந்த ஆய்வகம் பெரும் துணையாக அமையும்.

அதோடு, இலக்கவியல் அமைச்சர். கோபிந்த் சிங் டியோ கூறுகையில், “வாகன தடயவியல் ஆய்வகத்தை நிறுவுவது நாட்டின் தொழில்நுட்ப திறன்களை வலுப்படுத்துவது மட்டுமல்லாமல்,லக்கவியல் தொழில்நுட்ப பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும் தொழில்நுட்பம் சார்ந்த பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கும் அரசாங்கத்தின் அவாவிற்குஏற்பவும் உள்ளது.

இந்த முயற்சி, வாகன டிஜிட்டல் தடயவியல் துறையில் ஒரு ஆசியான் வட்டார நாடுகளின் தலைவராக, மலேசியாவின் நிலையை வலுப்படுத்துகிறது, இதன் வழி, மக்கள் சந்திக்கும்இலக்கவியல் அச்சுறுத்தல்களிலிருந்து தொடர்ந்து பாதுகாக்கப்படுவதை, உறுதி செய்வதில் இலக்கவியல் அமைச்சு முனைப்புகாட்டுகிறது.   மலேசியாவின் முதல் வாகன தடயவியல் ஆய்வகம்என மலேசிய சாதனை புத்தகத்தில், வாகன தடயவியல் ஆய்வகம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சாதனை சைபர் பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் தடயவியல் துறையில் மலேசியாவின் நிபுணத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது, அத்துடன் வாகன தடயவியல் கண்டுபிடிப்புகளில் இலக்கவியல் அமைச்சின் கீழ் இயங்கும் நிறுவனத்தின் நற்பெயரை வலுப்படுத்துகிறது. செயற்கை நுண்ணறிவு, இலகக்வியல் தொழில்நுட்ப உலகின் சவால்களை எதிர்கொள்வதில் நமது நாடு பாதுகாப்பாகவும், மீள்தன்மையுடனும், போட்டியாற்றலுடனும் இருப்பதை உறுதி செய்வததை இந்த முனைப்பு  எடுத்துரைக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here