ஸாரா கைரினா மரண வழக்கு: அச்சுறுத்தல்களுக்கு சட்ட நடவடிக்கை!

கோலாலம்பூர்:

13 வயது ஸாரா கைரினா மகாதீர் (Zara Qairina Mahathir) மரணம் தொடர்பான வழக்கில், பொதுமக்கள் நீதித்துறையின் செயல்முறையை மதிக்குமாறு, அட்டர்னி ஜெனரல் அலுவலகம் (Attorney General’s Chambers – AGC) வலியுறுத்தியுள்ளது.

அதுமட்டுமின்றி, சாட்சிகளுக்கு அச்சுறுத்தல் விடுப்பதை, சகித்துக்கொள்ள முடியாது என்றும் அது எச்சரித்தது.

மேலும், தடயவியல் நிபுணர் டாக்டர் ஜெஸ்ஸி ஹியூ (Dr Jessie Hiu) அளித்த சாட்சியம் காரணமாக, அவருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, சபா மாநிலத்தில், 61 வயதுடைய ஆடவர் ஒருவர், சமூக வலைத்தளத்தில், அச்சுறுத்தல் பதிவிட்டதற்காக, காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

எனவே தான், இந்த வழக்கில், தலையிடுவோருக்கு எதிராக, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று, அட்டர்னி ஜெனரல் டான்ஸ்ரீ முகமட் டுசுக்கி மொக்தார் (Tan Sri Mohd Dusuki Mokhtar) எச்சரித்தார்.

ஸாராவுக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்ய, இந்த வழக்கு, முழுமையாக விசாரிக்கப்படும் என்றும், அவர் உறுதியளித்தார்.

இதனிடையே, கடந்த ஜூலை 17-ஆம் தேதி, பபார் மாவட்டத்தில் உள்ள, தனது பள்ளி விடுதிக்கு அருகில், ஸாரா, சுயநினைவின்றி கண்டுபிடிக்கப்பட்டார். பின்னர், அவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here