கோலாலம்பூர்:
வீடமைப்பு ஊராட்சி அமைச்சு (KPKT), பொதுக் கழிப்பறைகள், பல்நோக்கு மண்டபங்கள், பொழுதுபோக்கு வசதிகளை மேம்படுத்துவதற்காக, 2024 முதல், இந்த ஆண்டு ஜூலை வரை, நாடு முழுவதும், 1,730 திட்டங்களுக்கு, RM281.9 மில்லியன் நிதியை, ஒதுக்கியுள்ளது.
அமைச்சர் ஙா கோர் மிங் கூறுகையில், இந்த நிதி, உள்கட்டமைப்பு, வசதிகள், சமூகப் பொருளாதாரம், பாதுகாப்பு உள்ளிட்ட பிரிவுகளின் கீழ், 156 ஊராட்சி அமைப்புகளுக்கு (local authorities), `பி.பி.1 வளர்ச்சித் திட்டம்’ மூலம், விநியோகிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
இதனிடையே கழிவு மேலாண்மை பராமரிப்பு சட்டம் பிரிவு 672-இன் கீழ், உள்ள மாநிலங்களில், குப்பை சேகரிப்பு, பூங்காப் பராமரிப்புப் பணிகள், நியமிக்கப்பட்ட நிறுவனங்களால் (concessionaires) நிர்வகிக்கப்படுகின்றன.
ஏனைய மாநிலங்களில், இந்தச் சேவை, ஊராட்சி அமைப்புகளின் பொறுப்பில் உள்ளது.
மேலும், தூய்மை, வசதிப் பராமரிப்பைக் கண்காணிக்க, செயற்கை நுண்ணறிவு (AI) ட்ரோன்கள் (drones) போன்றத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதற்கு, வீடமைப்பு ஊராட்சி அமைச்சு ஆதரவளிக்கிறது. நகர, மாநகர மற்றும் மாவட்ட மன்றங்களின் (city, municipal, and district councils) திறனைப் பொறுத்து, இந்தத் தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்படும் என்று, அவர் கூறினார்.




















