சபா: கனிம ஆய்வு தொடர்பாக ஊழல் இல்லை!

கோலாலம்பூர்:

டத்தோஸ்ரீ ஃபர்ஹாஷ் வாஃபா சால்வடார் (Datuk Seri Farhash Wafa Salvador) தொடர்புடைய நிறுவனம், சபா மாநிலத்தில், எந்தவொரு கனிம ஆய்வையும் மேற்கொள்ளவில்லை என்று, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (MACC) உறுதிப்படுத்தியுள்ளது.

சபா மினரல் மேனேஜ்மென்ட் (Sabah Mineral Management Sdn Bhd) நிறுவனம், மாநில அரசாங்கம் தொடர்புடைய தரப்புகள், சம்பந்தப்பட்ட விசாரணைகளில், எந்தவொரு குற்றவியல் அல்லது நிர்வாகப் பிரச்சினைகளும், கண்டறியப்படவில்லை என்று, தலைமை ஆணையர் டான் ஸ்ரீ அஸாம் பாக்கி (Tan Sri Azam Baki) கூறினார்.

மேலும், எந்தவொரு குற்றச்சாட்டுகளையும் பதிவு செய்ய முடியாது என்று, துணை அரசு வழக்கறிஞர் முடிவெடுத்துள்ளார்.

சபா மினரல் மேனேஜ்மென்ட், மார்ச் 2023-இல், நிபந்தனைக்குட்பட்ட ஒப்புதலை வழங்கியிருந்தாலும், அந்த நிறுவனம், தேவைப்படும் ஆவணங்களைச் சமர்ப்பிக்கத் தவறிவிட்டதால், மார்ச் 2025-இல், விண்ணப்பம் ரத்து செய்யப்பட்டது. ஃபர்ஹாஷின் பூமிகூறியா (Bumi Suria) நிறுவனம், நிலக்கரிச் சுரங்க உரிமத்துடன் தொடர்புடையதாகக், கூறப்பட்ட முந்தைய ஊடக அறிக்கைகள் இருந்தபோதிலும், அங்கு, எந்தவொரு ஆய்வும், ஒருபோதும் நடைபெறவில்லை என்று, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், வலியுறுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here