ஈப்போவில் கார் விபத்து : கணவன் உயிரிழப்பு, மனைவிக்கு லேசான காயம்

ஈப்போ:

சுல்தான் இட்ரிஸ் ஷா சாலையில் இன்று காலை கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், ஆடவர் ஒருவர் உயிரிழந்தார், அவரது மனைவி சிறிய அளவிலான காயங்களுடன் உயிர் தப்பினார்.

பேராக் தீயணைப்பு மற்றும் மீட்பு துறை இன்று காலை 8.06 மணிக்கு அவசர அழைப்பு பெற்றதும், ஈப்போ நிலையத்திலிருந்து ஒன்பது பணியாளர்கள் உடனே சம்பவ இடத்துக்குச் சென்றனர்.

விபத்தில் உயிரிழந்தவர் 55 வயது ஆடவர் என்றும், அவர் ஓட்டி வந்த டொயோட்டா கொரோல்லா ஆல்டிஸ் காரின் ஓட்டுநர் இருக்கையில் சிக்கிக்கொண்டார். சுகாதார அமைச்சின் மருத்துவர்கள் சம்பவ இடத்திலேயே அவர் இறந்ததை உறுதிப்படுத்தினர்.

அவரது 48 வயது மனைவி சிறிய காயங்களுடன் ஆரம்ப சிகிச்சை பெற்று, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார் என்று அவர் சொன்னார்.

தீயணைப்புப் படையினர் ஹைட்ராலிக் கருவிகளைப் பயன்படுத்தி சிக்கிய ஆடவரின் உடலை மீட்டெடுத்து, பின்னர் விசாரணைக்காக காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here