ஜொகூர் பாரு,
Accounts Clerk ஒருவர் நம்பகத்தன்மையற்ற ஒரு முதலீட்டு திட்டத்தில் சிக்கி RM527,681.17 இழந்தார் என போலீஸ் தெரிவித்துள்ளது.
அந்த 46 வயதான பெண்ணை அறிமுகமில்லாத ஒரு ஆண் அழைத்து, பந்தய அடிப்படையிலான ஒரு முதலீட்டு விளையாட்டை பரிந்துரைத்தார்.
கவரச்சிகரமான உரையாடல் மூலம் அந்த முதலீட்டு திட்டத்தை நம்பி ஆரம்ப முதலீடாக RM10,000 ஐ வைப்பு செய்து சில இலாபங்கள் பெற்ற பிறகு, ஜூலை 14 முதல் செப்டம்பர் 4 வரை, அவர் ஒன்பது வெவ்வேறு கணக்குகளில் மொத்தம் RM527,681.17 பணம் செலுத்தினார்.
அதன்பின்னர், எந்த இலாபமும் பெறமுடியாமல் போனபோதுதான் தமக்கு மோசடி நடப்பதை உணர்ந்துகொண்டார் அந்த பெண் என ஜொகூர் பாரு தென் போலீஸ் தலைவர் ACP ராவ் செல்லமட் கூறினார்.
அவர் செப்டம்பர் 12-ம் தேதி போலீசில் புகார் பதிவு செய்தார். போலீஸ் விசாரணையில் முதலீட்டு பணம் அவரது சொந்த சேமிப்பில் இருந்து வந்ததாக கண்டறிந்தது.
சமூக ஊடகங்கள் அல்லது வாட்ஸ்அப் மூலம் வரும் முதலீட்டு அழைப்புகளில் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் எனவும், Semak Mule அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் உறுதிபடுத்திக்கொள்ளவும் என அவர் அறிவுறுத்தினார்.
மேலும், மோசடிகளை உடனடியாக National Scam Response Centre (NSRC) 997-ல் தெரிவிக்கவும் அவர் மக்களை கேட்டுக்கொண்டார்.






















