வானில் குறைந்த உயரத்தில் வழங்கப்படும் வான் போக்குவரத்து சேவைகளின் பொருளாதாரத்தை ஒழுங்குபடுத்த `சி.ஏ.ஏ.எம்’ அமைப்பு: போக்குவரத்து அமைச்சர் அறிவிப்பு!

கோலாலம்பூர்:

வானில் குறைந்த உயரத்தில், ட்ரோன்கள் சிறிய விமானங்கள் வாயிலாக, பொருட்களை அனுப்புவது, ஏர் டாக்ஸி, ஒளி அலங்கார படைப்புகள், அவசர நிலை நடவடிக்கைகள் போன்ற சேவைகளை நெறிப்படுத்துவதற்கு ஒரு முறையான வழிமுறை கட்டமைப்பு விமான போக்குவரத்து ஆணையம்,CAAM-ஆல் அமைக்கப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் அறிவித்தார்.

விமான போக்குவரத்து ஆணையம் CAAM, MAVCOM நிறுவனத்துடன் இணைந்து தனது புதிய கார்ப்பரேட் தோற்றத்தை அறிமுகப்படுத்தும் விழாவில் பேசிய அந்தோனி லோக் கூறுகையில், இந்த புதிய வழிமுறை கட்டமைப்பு பாதுகாப்பையும் வளர்ச்சியையும் உறுதிப்படுத்துவதில் மிக முக்கியமான ஒன்று என தெரிவித்தார். அதுமட்டுமின்றி புத்தாக்கத் திறனை மட்டுப்படுத்தாத வகையில் இந்த புதிய வழிமுறை கட்டமைப்பு பொருத்தமானதாகவும் இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மேலும், CAAM, தற்போதுள்ள நெறிப்படுத்துதல் வழிமுறைகளை ஆய்வு செய்து தேவையற்ற வழிமுறைகளை நீக்கி, இதன் இயக்கத்தை மேம்படுத்த திட்டமிட்டுள்ள வேளையில், பொருளாதாரத்தை கண்காணிக்க புதிய துணை தலைமை நிர்வாக அதிகாரியையும் நியமிக்க உள்ளது எனவும் அமைச்சர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here